திதி: 20-11-2024
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
நந்தமிழ்ப் பண்பில் பூத்த நன்மகனாய் என்றும்
மங்கல வாழ்வு வாழ்ந்து மனயறம் போற்றி நின்றீர்
நன்கல நன்மக்களைப் பெற்று நாடெலாம் புகழ்ப்
பொங்கிய இன்பத்தோடு புவிமிசை வாழ்ந்தீர்கள்
மலையே இடிந்து வீழ்ந்தாலும் உங்கள் துணை இருந்ததால்
நிலையே சரிந்தாலும் கலங்காமல் நிமிர்ந்து நின்றோம்
மலையெனத் துன்பம் வந்து மனதினை நெருங்கும்போது
வலைத்தலைப் பட்ட மான்போல வாழ்கின்றோம் இவ்வுலகில்
வெள்ளிக்கிழமை என்றால் வெள்ளை வேட்டி சால்வையுடன்
அள்ளிக் குளித்து அலங்காரம் தான் புனைந்து
சோலை அம்மன் கோவில் செல்லும் சுந்தரரூபனை
காலை எழுந்தவுடன் கண்களில் காண்கின்றோம்.
சொந்த இடமும் போச்சு சுதந்திரமும் பறிபோச்சு
வந்தவர்க்குப் பின்னால் வாய்மூடி மௌனியாகி
எந்தவித உண்மையையும் எடுத்தியம்பும் உரிமையற்றுப்
பந்த பாசங்களுடன் பகட்டாக வாழ்கின்றோம்
எப்பவோ முடிந்தசெயல் என்று நாம் எண்ணவில்லை
அப்பாவே உங்களை எம்மால் மறக்க இயலவில்லை
ஆண்டு எட்டு ஆனாலும் ஆறவில்லை எம்மனது
ஆண்டு எட்டில் சிராத்தம் செய்து அஞ்சலி செலுத்துகின்றோம்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புக்கள்...