யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-12-2022
வீட்டிற்குத் தலைமகனாய் விரும்பியதெல்லாம் புரிந்து
கோட்டத்துக் கோமகனாய் எங்கள் குடும்பம் தனைக்காத்து
நாட்டிற்கு நாடுவந்து நன்றாகச் சம்பாதித்து
வாட்ட முறாமல் எமை வாழவைத்த தாதையே
கவசமாய் ஆருயிராய்க் கண்ணாய்க் காவலனாய்
சகஜமாய் நாம்வாழ சகலதையும் ஆக்கிவைத்தீர்
முதுசமாய் திருஅளித்து முன்னேற வழியமைத்தீர்
திவசம் அளித்துச் செந்நெறியில் நிற்கின்றோம்
காலங்கள் முழுதும் கண்ணியமாக வாழ்ந்தீர்கள்
காலன் வந்தபோதும் கலங்காமல் வரவேற்றீர்கள்
காலச்சக்கரம் கடகடவெனக் கடந்தாலும்
காலங்கள் உள்ளவரை கண்களில் நிறைந்திருப்பீர்
அரிதான காரியங்களையும் எளிதாக முடித்துவைக்கும்
விரிவான சிந்தையை வியந்து போற்றுகின்றோம்
ஆண்டாண்டு சென்றாலும் ஆறாத துயரத்துடன்
ஆண்டாறில் சிராத்தம் செய்து அஞ்சலித்து நிற்கின்றோம்.
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புக்கள்