வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாரஜனி ஶ்ரீதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பிரபஞ்சத்தின் வரிசையிலே
பிறந்த சுபகிருது வருடத்தில்
வழிபிறக்கத் தான்பிறந்த
தைமாத வெள்ளி 13ம் நாளன்று
பூர்வபட்ச சப்தமி (வளர்பிறை)யில்
கரம் பிடித்தவன் கலங்கி நிற்க,
கண்மணிகளிரண்டும் கதறியழ
சுற்றம் உடன்பிறப்புக்கள்
சூழநின்று சுற்றியழ
பூவாக்கி தன்னுயிரை
இறைவன் பூங்கழல்கள்
சேர்த்தாளே கலாரஜனி!
எங்கள் குடும்பக் குத்துவிளக்கு ரஜனியின் திடீர் சுகயீனம் மற்றும் மறைவுச்செய்தி கேட்டு ஆறுதல் தெரிவித்தும் துயரங்களை எம்முடன் பகிர்ந்தும் கொண்ட அன்பு உள்ளங்களுக்கும் பலவகைகளில் உதவி ஒத்தாசைகள் வழங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனைத்து கிரிகைகளிலும் உதவிய, பங்கேற்ற அன்பு உறவுகளுக்கும் எமது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
Sireetharan Family,
Westpreussenstr. 6, 26919 Brake,
Germany
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...