வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாரஜனி ஶ்ரீதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:17/01/2024
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
வான் உறையும் தெய்வத்துடன் இணைந்துவிட்ட
எமது அன்புத் துணையே!
எம்முடன் பிணைந்து வழி நடந்த இணையே!
உற்ற துணையாயிருந்து உதவி பல செய்தவளே!
குற்றம் குறையற்றவளே
எம்முடன் குலவி மகிழ்ந்தவளே!
ஏது குற்றம் நாம் செய்தோம்
நீ இடைவழியிற் செல்வதற்கு!
ஓரவிழிப் பார்வையிலே எமக்கு
ஒளிவெள்ளம்
கொடுத்தவளே!
ஈரவிழிப் பார்வையாலே
எமை எல்லாம் ஈர்த்தவளே!
பூப்போல் எம்முடன் இருந்து
புதுத் தேனை சொரிந்தவளே!
உன் இதழ் சிந்தும் புன்னகையால்
எம் துயரை துடைத்தவளே!
என்னோடு நீ இணைந்து
கரு சுமந்த கனி இரண்டும்
உன் பிரிவை நிதம் நினைந்து
என்னோடு ஏங்குகிறேன்!
நீ விட்டுச் சென்ற பணி நினைந்து
இயலும் வரை சுழலுகின்றேன்!
ஆண்டு ஒன்று ஆனாலும் அடங்க மறுக்கும்
உன் நினைவுகளோடு!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...