2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
21
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாரஜனி ஶ்ரீதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-02-2025
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் இரண்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம்
உங்களின் இறப்பால்....
என்ன செய்வது
எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்ம
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...