

அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் (கஜன், Civil Engineering):
பிறப்பு: 08 NOV 1990
இறப்பு: 03 SEP 2020
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உந்தன் நினைவுகள் நீங்காது சகோதரனே
எங்களுக்கு பெருமை சேர்த்த
எந்தன் சகோதரனே உந்தன் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உந்தன் நினைவுகளுடன்
உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்:
பிறப்பு: 04 NOV 1990
இறப்பு: 03 SEP 2020
ஹற்றனைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கண்டி, கனடா Toronto, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே
பிரிவின் தூரம் அறிந்தும்
உனை மனம் துரத்தித் தேடுதே!...
பக்கத்தில் நீ இருப்பது
போன்ற நினைப்புடனே
பகல் இரவை கடக்கின்றோம்
நேற்று வரை நீ எம்முடன்
வாழ்ந்து நிறைவு கண்டதெல்லாம்
நேற்றோடு போயிற்று
உன் நினைவொன்றே
எப்போதும் எங்கள் வாழ்வாக
நினைவில், நித்திரையில்,
எங்கள் உணர்வில், உள்ளத்தில்,
கனவில், கற்பனையில்
கண்பார்க்கும் இடமெல்லாம்
நீ நிறைந்திருக்கிருக்கிறாய்
நீ இல்லாத நாட்கள்
உயிரில்லாத நொடிகளாகிறது
உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!