அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் (கஜன், Civil Engineering):
பிறப்பு: 08 NOV 1990
இறப்பு: 03 SEP 2020
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
“இரத்தத்தின் இரத்தமே என் இனிய உடன் பிறப்பே
கஜுக்குட்டியே எம் கட்டித் தங்கமே
நாளெல்லாம் கதைபேசி நாம் ரசித்து வாழ்ந்த
காலத்தை கலைத்து போட்டது காலம்
எங்கள் உயிர்மூச்சே ஆயிரம் யானைபலம்
நீ எம் அருகில் இருந்தால்
எம் வாழ்வின் பொக்கிஷமே
அனைத்தையும் இழந்து தவிக்கின்றோம்
பாராட்டிச் சீராட்டி
பாதியிலே பறிகொடுத்தோம்
பார்க்கும் முகங்கள்
எல்லாம் உன் உருவம் நிழலாட
பரிதவித்து நிற்கின்றோம்
நேற்றுப் போல் எல்லாம் நினைவிருக்க
காலத்தின் கட்டாயம் ஆண்டுகள் நான்கும் ஆகிவிட்டது
நெஞ்சு வலிக்க வலிக்க நினைவுகளைத் தந்தாயே
நீ தந்த நினைவுகள் உயிரோடு இருக்க இறுதி வரை
சுமக்கின்றோம் வழியெல்லாம் விழிநீராய்
ௐ சாந்தி ௐ சாந்தி ௐ சாந்தி
அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்:
பிறப்பு: 04 NOV 1990
இறப்பு: 03 SEP 2020
ஹற்றனைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கண்டி, கனடா Toronto, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணோரும் தினம்
வியந்த எம் திருமகனே
ஏனோ? நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?.
உள்ளம் உடைந்து கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகித் தவிக்கும்
எங்களின் நிலையை யார் தான் அறிவார் மகனே?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமப்பா!!!
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன்
நீங்காத நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...