அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் (கஜன், Civil Engineering):
பிறப்பு: 08 NOV 1990
இறப்பு: 03 SEP 2020
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே
பிரிவின் தூரம் அறிந்தும்
உனை மனம் துரத்தித் தேடுதே!...
பக்கத்தில் நீ இருப்பது
போன்ற நினைப்புடனே
பகல் இரவை கடக்கின்றோம்
நேற்று வரை நீ எம்முடன்
வாழ்ந்து நிறைவு கண்டதெல்லாம்
நேற்றோடு போயிற்று
உன் நினைவொன்றே
எப்போதும் எங்கள் வாழ்வாக…
நினைவில், நித்திரையில்,
எங்கள் உணர்வில், உள்ளத்தில்,
கனவில், கற்பனையில்
கண்பார்க்கும் இடமெல்லாம்
நீ நிறைந்திருக்கிருக்கிறாய்
நீ இல்லாத நாட்கள்
உயிரில்லாத நொடிகளாகிறது
நீ வாழ்ந்த வீடு
நீ கடந்து சென்ற இடம்
என்று எப்போதும்
உன்னை நாங்கள் நினைத்திருக்க
நீ மட்டும் எங்கு போனாய்?
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்:
பிறப்பு: 04 NOV 1990
இறப்பு: 03 SEP 2020
ஹற்றனைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கண்டி, கனடா Toronto, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டும் நீ வருவாயா மகனே....!
நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட
கனவு ஏராளம்...!
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள்
நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த
போதெல்லாம் தெரியவில்லை
எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!