கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
செந்தமிழ்ச் செல்வனே..
முத்தமிழ் வேந்தனே.
உள்ளம் வெந்து துடித்து
உரக்கக் கத்துகிறோம்..
உத்தமனே உன் பிரிவு
உயிருள்ளவரை உறங்காதய்யா..
மண்ணுலகிற்கு நீ பிறந்தது..
மாபெரும் புண்ணியமாய்..
எண்ணிய எம் நெஞ்சமெல்லாம்..
கண்ணிமைக்கும் நேரத்தில்..
கண்ணூறாய் போனதென்ன..?
திரும்பிய பக்கமெல்லாம்..
உன் திருவுருவம் கண்ணுக்குள்
நிறைக்குதய்யா.. கதறியழுதாலும்
உன்னைப்போலொரு செல்வன்...
இந்த உலகம் காணாதய்யா...
உற்றார், உறவினர்கள் மற்றார் எல்லோரும்..
உண்ணாமல், உறங்காமல் தவிக்கின்றோம்..
கண்ணே நீ கலங்காமல் கண்ணுறங்கு..
காலம் இதற்குப் பதில் சொல்லும்.