1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்
இறப்பு
- 03 SEP 2020

அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்
2020
பளை, Sri Lanka
Sri Lanka
Tribute
90
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமை எல்லாம் ஆள வந்தவனே நீ எங்கு சென்றாய்
எங்கள் கஜுக்குட்டியே திரும்பி வா!
எத்தனை எத்தனை கனவுகளால் உனக்கொரு
மாளிகை கட்டினோம் உடைத்தவர் யார்?
அம்மாவை கடந்து செல்லும் போதெல்லாம்
ஓடி வந்து இறுக்கி அணைந்து முகர்ந்து பார்ப்பாய்
அந்த அன்பை சிதைத்தது யார்? திரும்பி வா!
கனவுகளை சுமந்து சென்றவனே வீடு
திரும்பி வராமல் எங்கு போனாய் திரும்பி வா!
நாம் கட்டிய அன்புக் கூட்டைப்
பிய்த்துப் போட்டது யார்? திரும்பி வா!
நீ இன்றி போனபின் நாம்
என்னானோம் திரும்பி வந்துபார்!
வந்திவிடு திரும்பி வந்துவிடு
தகவல்:
அம்மா(மங்கை)