தம்பி சாரங்கன் நீ இவ்வுலகம் விட்டுச்சென்ற செய்திகேட்டு எனது இருதயம் ஒரு கணம் உறைந்துபோனது, உனது அத்தை கீதா உனது உடல் நிலைகள் பற்றி எனக்கு கூறும்போதெல்லாம் கடவுளே அவனிற்கு ஏன் இந்த நிலமை, அவனை காப்பாற்று என்று கடவுளிடம் கூட உனக்காக வேண்டினேன். கடவுள் இல்லலை என்று நான் சொல்வதற்கு உன்னைப்போன்றவர்கள் பட்ட துன்பங்களும் காரணமாகியது. நீ வாழவேண்டியவன் அரிய சாதனைகளை நிகழ்த்தவேண்டியவன். எதற்கு இந்த அவசரம், எதற்கு நீ வாழ்கின்ற காலத்தில் அசெளகரியங்கள். மருத்துவம் வளர்ச்சியடைந்துவிட்டது என்கிறார்கள், உன்னைப்போன்ற சிறுவர்களை குணமாக்காத வைத்தியம் வளர்சியடைந்துவிட்டதென்று நான் நம்பவில்லை. நீ மீண்டும் நோய் துன்பம் இன்றி உன் பெற்றோர், சகோதர ர்கள், உனது உறவினர்கள் முன் இப்போதே தோன்றமாட்டாயா என்று என் மனம் இயற்கையை கையேந்தி நிற்கின்றது. சென்றுவா என்று சொல்லிட மனம் இல்லை நோய் துன்பம் இன்றி இன்றே திரும்பிவா உனது பெற்றோர் முன். உனது படங்களை பார்க்கும் பொழுதெல்லாம் உன் மீது எனக்கு ஓர் இனம்புரியமுடியாத விருப்பம் ஏற்படுவதை நான் உணர்ந்தேன். உனது இழப்பால் வாடி நிற்கும் உனது அம்மா அப்பா சகோதர்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் கனத்த மனத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு மாமா வரதன்/ கீதா அத்தை, பிள்ளைகள் Australia, Sydney
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்