கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரங்கன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-12-2025
மீண்டும் நீ வருவாயா சாரங்கா!
கருவாகி உருவாகி சிசுவாகி
கனவையும் புயலையும் கவலையும்
கலைத்திட்ட எம் உயிருடன் கலந்த சாரங்கா
கனவாகிவிட்டதே எம் நினைவெல்லாம்!
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்தவனே!
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
அத்தனையும் உமைப்போல் ஆகுமா!
இப்பாரினிலே எம்மைப் பிரிந்து
நான்கு ஆண்டு ஆனதையா!
பாவியர் உள்ளம் உருகுதையா உன் நினைவுகளில்
பூத்துக் குலுங்கும் பூக்களின் புன்னகையில்
உன்
குதூகலப் பேச்சை குழந்தைச் சிரிப்பை தொலைத்து
ஆண்டுகள் நான்கு ஆனதையா
பாரினில் உன் நிஜத்தை காணமுடியவில்லை!
பாசமான அம்மா ஆசைமிக்க சகோதரங்கள்
அரவணைத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்
அத்தனை பேரும் உன் புதிய உதயத்தை
இத்தரணியில் வேண்டுகின்றோம்
இறைவனிடம் யாசிக்கின்றோம்!
நீ மீண்டும் வருவாயாக மகனே சாரங்கா!
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்