கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகநேசன் சாரங்கன் அவர்களின் நன்றி நவிலல்.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர
நின் பிரிவின் ஒரு மாதம் ஆனதே!
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே
நேற்றுப் போல் எல்லாம்
எம் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்!
சென்றுவிட்டாய் என்று என்னால்
சிறிதும் எண்ணத் தோன்றவில்லையடா
சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே...
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு
குடும்பத்தினர்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்