3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகநேசன் சாரங்கன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்பது இறைவன்
அவன்
வகுத்த வரைதானே
அடுக்கடுக்காக
ஆண்டுகள் மூன்று சென்றன
அருகில் நீ இல்லாததால்
உன்
அன்பு தனை இழந்தோமே
நாம் அன்பு மகனே!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உன் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உன் நினைவுகளை
சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில்
விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை
வளப்படுத்துத்து அன்பு மகனே!
உன் ஆத்மா சாந்தியடைய
என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்