யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தேவநாயகம் ஜோசபின் அவர்களின் 31ம் நாள் நீங்காத நினைவுகளும், நன்றி நவிலலும்.
நாற்பத்தாறு ஆண்டுகளாய்
ஒரு கூட்டில் வாழ்ந்திருந்து
இன்பத்திலும் துன்பத்திலும்
எங்கு சென்ற போதினிலும்
என்னோடு பின் தொடர்ந்து
உனது நோய் துன்பங்களை
உனக்குள்ளே மறைத்து வைத்து
என் வாழ்வின் உயிர் துடிப்பாய்
என்னோடு வாழ்ந்தவளே
உன் துணையின்றி என்வாழ்வை
எப்படி நான் தொடர்ந்திடுவேன்?
குடியிருந்த கோவிலம்மா - நீ
எமை இவ் குவலையத்தில் தவிக்கவிட்டு
குருபரனைக் கும்பிடவா கடுகதியில்
பறந்து சென்றாய்?
தாயென்னும் கோவிலம்மா உன்னை
தவிக்கவிட்டு வாழ்ந்த துயர்
தாள முடியவில்லை அம்மா!
உன் கடனை எப்படித்தான்
தீர்த்து வைக்கப் போகின்றோம்
உன் சின்னச் சின்ன ஆசைகளை கூட
நிறைவேற்றவில்லையே தாயே!
குற்றமிழைத்த நெஞ்சினராய்
குமுறுகிறோம் தொலைவில் நின்று
இறுதியாக எப்போது உன்முகத்தைப் பார்த்திடுவோம்
உன் பிரிவின் வேதனையால்
உடன் பிறந்த சகோதரமும்
உற்றார் உறவினரும்
அயலவரும் அன்பர்களும் உன்
ஆன்மா அமைதிபெற
ஆண்டவனை வேண்டுகிறோம்.
செபம்
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். (யோவ 12:24) என்ற இறை வார்த்தையை எமது வாழ்வில் உணர வைத்த இயேசுவே உமது திருவுள்ளப்படி உமதண்டை அழைத்த திருமதி வேதநாயகம் ஜோசப்பினுடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுகின்றோம். அவரை கடந்த 74 வருட காலமாக பராமரித்து வழிநடத்தியமைக்காக இறைவனுக்கு நன்றி கூருகின்றோம்.
இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 16-11-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறும் திருப்பலியில் பங்கு கொண்டு செபிக்கவும்.
திருப்பலிகள் நடைபெறும் இடங்கள்
யாழ் புனித மரியன்னை பேராலயம் - காலை 06:15 மணி
தியான இல்லம், பழைய பூங்கா வீதி, யாழ்ப்பாணம் - காலை 09:00 மணி
புனித பற்றிமா ஆலயம் உருத்திர புரம், கிளிநொச்சி(14-11-2020) - காலை 06:00 மணி
புனித பியோ, யாத்திரை ஸ்தலம், அந்துருகிரிய, கொழும்பு - காலை 06:30 மணி
புனித செபஸ்த்தியார் ஆலயம், புளியடிக்குடா, மட்டக்களப்பு - காலை 06:00 மணி
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது இல்லத்திற்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், அருட்சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக திருப்பலிகள் நடைபெறுவது தடைப்படலாம்.
தவம் அன்ரி உங்கள் பிரிவை நம்பமுடியாமல் உள்ளது. என் சிறுபராயத்தில் இருந்து எனது எல்லாநிகழ்விலும் நீங்கள்தான் ஆசிர்வதிப்பிர்கள். உங்கள் நலனைவிடவும் உறவுகளின் நலனில் மிகவும் அக்கறையும் கரிசனையும்...