
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் தேவநாயகம் ஜோசபின் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுக்குள் அனைத்தும் அணைந்ததுவோ அம்மா,
அழைத்துக் கொண்டீரே எம் அன்பு அப்பாவையும்
உம்மடியில் நிரந்தரமாய் இவ்வாண்டில்.
ஆற்றிட யாருண்டு,
அனாதைகளாய் அலைகின்றோமே அம்மா.
நிம்மதி இழந்து நிற்கதியாய்,
உங்கள் நினைவுகள் மட்டும் சுமந்து,
சூழ்நிலையின் பிடியில் சுற்றமும் மறந்து,
தடுமாறும் எம் கால்கள்
ரணங்களின் நாட்களில் நடைபோடும் எங்களுக்காக
நித்திய வாழ்வில் இறைவனை மன்றாடுங்கள்.
மனதோடு போராடும் மறையாத ஞாபகங்கள்,
நீர்விழியோடு உம் நினைவு என்றென்றும்
மாறாது,
மறையாது அம்மா.
உங்கள் பிரிவால் தவிக்கும்:
பிள்ளைகள், மருமக்கள், பெறாமகள்,
பேரப்பிள்ளைகள்,
சகோதரர், சகோதரிகள், நண்பர்கள்.
வீட்டு முகவரி:
4A அச்சுகூடவீதி,
யாழ்ப்பாணம்.
தவம் அன்ரி உங்கள் பிரிவை நம்பமுடியாமல் உள்ளது. என் சிறுபராயத்தில் இருந்து எனது எல்லாநிகழ்விலும் நீங்கள்தான் ஆசிர்வதிப்பிர்கள். உங்கள் நலனைவிடவும் உறவுகளின் நலனில் மிகவும் அக்கறையும் கரிசனையும்...