1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 APR 1946
இறப்பு 17 OCT 2020
அமரர் தேவநாயகம் ஜோசபின் (தவம்)
வயது 74
அமரர் தேவநாயகம் ஜோசபின் 1946 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில்
வைத்துக் கொள்ளும் மனிதர் பேறுபெற்றோர் (தி.பா . 65:4)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவநாயகம் ஜோசபின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஓடியதோ அம்மா
ஆனாலும் ஓயாது எம்துயரம்
தாளாது எங்கள் மனம்
தவமாய் வந்தவளே!
நெஞ்சூட்டி வளர்த்தவளே!
குஞ்சுகளாய் காத்தவளே!
 
நீ இருந்தபோது உம்
அருமைபுரியவில்லை அம்மா
நீ மறைந்தபோது
எம் இதயம் கனக்கிறது!

எத்தனை பிறவியோ அம்மா -இனி
உன் பூ முகத்தை பார்ப்பதற்கு
எங்கு உமைத் தேடுவதோ
நாம் பட்டகடனைத் தீர்ப்பதற்கு!
 
அனைவரையும்ஆதரிப்பாய்
பக்குவமும் பல சொல்லிடுவாய்
இப்போது அவை கேட்க
நீ இங்கு இல்லைம்மா!

எம்மைப் போல பாவியாகி
 உன் மடியில் ஏன் பிறந்தோம்.....
கடைசிப்பிடி மண்ணை கூட
போட எம்மால் முடியல...
அதுக்குக் கூட எங்களுக்கு
கொடுப்பனவு கிடைக்கல....

 மனதோடு போராடும் மறையாத
ஞாபகங்கள் எம் நீர் விழியோடு
 உம் நினைவு என்றேன்றும் மாறாது!
மறையாது அம்மா!!

நித்திய வாழ்வினில் பயணிக்கும்
எம் அன்புத்தாயே
உங்கள் ஆத்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றி
அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 
என்றும் உங்கள் பிரிவில் தவிக்கும்
 கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக உருத்திரபுரம் புனித பற்றிமா ஆலயத்தில் 16-10-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இரங்கல் திருப்பலி இடம்பெறும். அதனைத்தொடர்ந்து 8ம் வாய்க்கால் உருத்திரபுரத்திலுள்ள எமது இல்லத்தில் நடைபெறவுள்ள மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 17 Oct, 2020
நன்றி நவிலல் Sat, 14 Nov, 2020