யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவநாயகம் ஜோசபின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உமை இழந்த
ஈராண்டின் இடைவெளியில்
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்கள்
நீர் விழியோடு
உம் நினைவு என்றென்றும்
மாறாது மறையாது அம்மா
இமைப்பொழுதின் அரை நொடியில்
உமை நினைக்காத கணமில்லை
வேரற்ற மரங்களாய்
மாசற்ற உம் அன்பு
மறுபடி மலராதோ என ஏங்கி....
தூங்காத பல இரவுகளில்
கனக்கின்ற உம் பாசத்தின்
ஏக்கங்கள் வலிகளாய்
எமை கொல்கிறதே....
வார்த்தைகள் வந்து முண்டியடிக்கும்
உம் வலி தந்த அனுபவத்தை
வடித்துவிட அன்னையே !
அதை வரிகள் கொண்டு
விளக்க என்னால் முடியவில்லை...
அவை மூச்சுக்குள்
முட்டிமுனகும் முகாரிகள்...
இவையெல்லாம்
எதுவரை தாயே!
அதுவரை இத்துயர்
வெல்ல வழியில்லை அம்மா!
நித்திய வாழ்வினில் பயணிக்கும்
எம் அன்புத் தாயே
உங்கள் ஆத்மா இறைவனில்
நித்திய இளைப்பாற்றி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் பிரிவில் தவிக்கும்
கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
இல.4A, அச்சுக்கூட வீதி,
யாழ்ப்பாணம்.
தவம் அன்ரி உங்கள் பிரிவை நம்பமுடியாமல் உள்ளது. என் சிறுபராயத்தில் இருந்து எனது எல்லாநிகழ்விலும் நீங்கள்தான் ஆசிர்வதிப்பிர்கள். உங்கள் நலனைவிடவும் உறவுகளின் நலனில் மிகவும் அக்கறையும் கரிசனையும்...