ஆண்டவரே நீர் தேர்தெடுத்த மக்களின்
நல்வாழ்வை
நான் காணும்படி செய்யும்(தி.பா 106:5)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவநாயகம் ஜோசபின் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது
அழுதாலும் தீராது எம் தாயே !!!!!
ஆண்டுகள் மூன்று கரைந்ததுவே,
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள்
அம்மா. ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா.
உங்கள் பிரிவும், நாங்கள் படும் தவிப்பும்
ஆறாது அம்மா.
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!!
இமைப் பொழுதில் காலன் உம்மைக்
கவர்ந்துவிட்டான்.
இக் கணமும் உங்கள்
நினைவால்
கலங்குகின்றோம் அம்மா
ஆண்டுகள் நூறு கடந்தால் என்ன?
அடுத்தடுத்து நாம் வேறு பிறப்பெடுத்தால் என்ன?
அன்றும்! இன்றும்! என்றும்! மாறாது
உங்கள் அன்பும் பாசமும்.
உங்கள் ஆத்மா நிலை வாழ்வில்
இளைப்பாற வேண்டி நிற்கின்றோம்
வீட்டு முகவரி
இல.4A, அச்சுக்கூட வீதி,
யாழ்ப்பாணம்.
தவம் அன்ரி உங்கள் பிரிவை நம்பமுடியாமல் உள்ளது. என் சிறுபராயத்தில் இருந்து எனது எல்லாநிகழ்விலும் நீங்கள்தான் ஆசிர்வதிப்பிர்கள். உங்கள் நலனைவிடவும் உறவுகளின் நலனில் மிகவும் அக்கறையும் கரிசனையும்...