யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-01-2024
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள்
ஏழு ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள்
அன்புத் தாயே நினைவெல்லாம்
உங்களைச் சுமந்தல்லோ
நிற்கின்றோம் நிலவை
சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள்
முகம்தானே பட்டொளியாய்
தெரிகிறது ஆண்டுகள் பல
சென்றாலும் - எம் மனதில்
பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே
உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம்!
ஆண்டு ஏழு சென்றாலும்
ஆறாது எங்கள் மனம்
கண்ணீர் பூக்களால் காணிக்கை செய்து
உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்...
வீட்டு முகவரி:
EG2, De Mel-Grandpass Road,
Colombo 14, Sri Lanka.
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!