யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-12-2021
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்
தாரமாய், தாயாய், சகோதரியாய்
உங்கள் கஷ்டங்களை விடுத்து
எங்களை நீங்களாக நினைத்து எந்த
குறையும் இல்லாமல் பார்த்த எங்கள் தாயே!
நாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தினம் தினம் வாடுகின்றோம் எம் வாழ்வினிலே
அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை எண்ணி ஏங்கி
தவிக்கின்றோம் அம்மா!
காலங்கள் மாறினாலும்
கனவுகள் கலைந்து சென்றாலும்
உங்கள் கோல முகமும குளிர்ந்த
நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
உங்களை நினைத்தே வாழ்வோம்!
எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்களை விட்டு போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
கணவர், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்
EG 2. Demel Flats,
Grand pass Road,
Colombo 14.
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!