4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்குபோன பின்பும்
அழுத விழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவளை
அனுதினமும் நினைக்கின்றோம்
பார் புகழ் நாம் வாழ பாதைகள் வகுத்தவளே
காலம் எல்லாம் நாம் வாழ கனவுகளை
சுமந்தவளே- துணிவோடு முடிவெடுத்து
தூணாக நின்றவளே-இன்று
துணையின்றி தவிக்கின்றோம்
உன்னையிழந்து நாங்கள்- இங்கே
வேர்அறுந்த மரங்களாய் உங்கள்
நினைவென்னும் விழுது தாங்கி
நிற்கின்றோம்-ஆண்டாண்டு
அழுதாலும் இனி காணக்கிடைக்காது
உங்கள் அழகு முகம்-ஆனாலும்
தாகம் கொண்டு தவிக்கிறது
எங்கள் பாச நெஞ்சம் ....
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கும்
கணவன் , பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!