3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் குத்துவிளக்கே
நீ
அணைந்தாயோ!!!!!!!
மூன்றாண்டு ஓடியும்- எம்
மனமாறாத் துயரோடும்
உன் நினைவோடும் விழியோர நீரோடு
வழி கடந்து செல்கின்றோம்
காலன் கொடியவன் கண்ணியமற்றவன்
சொல்லாமல் உன் உயிரை
எல்லோரும் கதறியழ பறித்தானே
கணப்பொழுதில்- இன்று
விண்ணுலகம் உனக்கு சொந்தவீடானதோ
மண்ணுலகம் எமக்கு நீயல்லா
வெறும் வீடானதோ- ஒளி இழந்த
வீட்டில் உணர்விழந்து நாங்கள்
உன்னை இழந்து தவிக்கின்றோம்
என்றும் உன் நீங்கா நினைவுடன் வாழும்
கணவர், பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!