யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் குலவிளக்கே
உங்கள் நினைவுகளை மீட்டியபடியே
இரண்டாண்டுகள் கடந்து விட்டது- கடக்கும்
ஒவ்வொரு பொழுதினிலும் மிஞ்சுவது
ஏனோ கன்ணீர் மட்டும் தான்
ஆறாத துயரம் தான் ஆறிடுமோ- அன்றேல் நம்
அனைவரின் அழுகைக்கு தான் அணை போட முடியுமோ
வாழும் வயதில் நீ வாழ்வை இழந்தாய்
நாளும் பொழுதும் நாம் உன்னை இழந்தோம்
தோளோடு தோள் கொடுக்க பக்கத்தில் நீ இருந்தால்
தாளாது எம் மனது தரணியில் நாம் வாழும் வரை!!
நிலவொளியில் பிறந்து நிலா போல் பிரகாசித்தாய்
இளைய நிலவாய் இளம் பிறை போல் வளர்ந்தாய்
சிரித்த முகத்தோடு நம் அருகில் சிறகடித்தாய்
வருத்தம் வந்த பின்பும் வாழ்வை நீ நேசித்தாய்
பொருத்தம் என்று எண்ணி பொய் மனது புரிந்ததுமே
விருப்பமான வாழ்வை விதி என்று முடித்து விட்டாய்
சுவர்க்கத்தை நீ சுவாசிக்க சென்று விட்டாய்
சோகத்தை எமக்காக யாசிக்க வைத்து விட்டாய்
ஆயிரம் ஆன்மாக்கள் ஆறுதல் சொன்னாலும்
ஆர்பரிக்கும் ஆழி அமைதி பெற்றாலும்
ஆண்டுகள் நீண்டு போய் ஆயிரமானாலும்
ஆறாத எம் ஆழ் மனதில்- உன் நினைவுகளை
அடக்கி ஒடுக்க முடியவில்லை!!!
என்றும் ஆறாத்துயரத்துடனும்
உங்கள் நினைவுகளுடன் வாழும்
அம்மா, கணவர், பிள்ளைகள்,
சகோதரர்கள், சகோதரிகள்.
We miss you Chithra! We miss you a lot! May your soul rest in peace!