யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுதர்சினி கிரிதரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அன்னையே…
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்!
கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது...
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க
உன் நினைவுகள் இருந்தால் போதும் அன்பே!
நமக்காக யோசிக்க ஒரு வாழ்க்கை
துணை இருக்கின்றது என்பதை
உணரும் போது என்னை விட்டு
பிரிந்து விட்டீர்கள்...
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள்
என்ற உணர்வுடனும் உங்கள்
செயல் நினைவுகளையும் எத்தனை
வருடங்கள் சென்றாலும் மறவோம் அன்பு அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
என்றும் உங்கள் நினைவுகளோடு
அன்புடன் கணவர், பிள்ளைகள்....
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்்அவரின் மறைவு எமது தமிழ்ப் பள்ளிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கவுன்சுலோ முத்தமிழ் பள்ளி