1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுதர்சினி கிரிதரன்
(ராஜி)
வயது 45
Tribute
40
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுதர்சினி கிரிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-05-2022
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்!
கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது...
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களைக் காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை!
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது...
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்்அவரின் மறைவு எமது தமிழ்ப் பள்ளிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கவுன்சுலோ முத்தமிழ் பள்ளி