2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசுதர்சினி கிரிதரன்
(ராஜி)
வயது 45
Tribute
40
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுதர்சினி கிரிதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-06-2023
நீலவிழிகள் நீர்சொரிய
நிறைந்ததுவோ ஈராண்டுகள்
நிறைநிலவே!
நீங்கிடாதே உம் நினைவு
மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும் விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள்
மீண்டும் மண்ணுக்கு வரமாட்டீரோ ?
எம் கண்ணிலே வழியும் நீரை
உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும், கருமுகிலும்
இவ்வுலகில் போற்றி வாழ்கின்ற காலம்வரை...
எம் கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில் வீற்றிருக்கும் இறுதி காலம்வரை...
உங்கள் நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை கரங்கள் கூப்பி...
தகவல்:
குடும்பத்தினர்
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்்அவரின் மறைவு எமது தமிழ்ப் பள்ளிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கவுன்சுலோ முத்தமிழ் பள்ளி