4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசுதர்சினி கிரிதரன்
(ராஜி)
வயது 45
Tribute
40
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 24-05-2025
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுதர்சினி கிரிதரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!
காலங்கள் கடந்து சென்றாலும் கடலுடன்
என்றுமே வாழும் அலைகள் போல் என்றும்
உங்கள் நினைவுடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்்அவரின் மறைவு எமது தமிழ்ப் பள்ளிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கவுன்சுலோ முத்தமிழ் பள்ளி