Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUL 1970
இறப்பு 17 AUG 2017
அமரர் அன்பழகன் கனகலிங்கம் (அன்பு)
உரிமையாளர்- Betterway, Queensbury
வயது 47
அமரர் அன்பழகன் கனகலிங்கம் 1970 - 2017 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு -இல்லா உலகம்
ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன,
காலம் எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றாலும்,
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதை விட்டு ஒருபோதும் மறையவில்லை.

நினைவுகளின் பாதையில் நடக்கும்போது,
 நீ நடந்த சுவடுகள் இன்னும் தெரிகின்றன.

எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை.
அழுது அழுது ஓய்ந்த கண்கள்
உங்களைத் தேடிக்கொண்டிருக்ககுது.
அன்பு இல்லாத வாழ்க்கை மிகவும்
வெறுமையாகவும் தனிமையாகவும் இருக்கிறது.

 நீங்கள் ஒரு நல்ல மனிதராக மட்டுமல்லாமல்,
அனைவராலும் மறக்க முடியாத
ஒருவராகவும் இருக்கிறீர்கள்.
உன் புன்னகை பூத்த முகத்தை இழந்த பிறகு,
 நாங்கள் நிம்மதியற்ற வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கைப் பாதையில் ஓட
எங்களுக்குக் கற்றுக்கொடுத்தீர்கள்,
ஆனால் இப்போது நாங்கள்
திரும்பிப் பார்க்கும்போது நீங்கள் இங்கே இல்லை.
வாழ்க்கையில் நாம் எவ்வளவு
தூரம் ஓடினாலும் எதைச் சாதித்தாலும்...
 நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்போதும்
தோல்வியுற்றதாகவே உணர்கிறோம். 
எங்களை மன உறுதியுடன் உருவாக்கினீர்கள்.
 அனைத்தும் உன்னுடன் வீழ்ந்தது ஐயா!!

உங்களை மீண்டும் பெற
நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
யாரிடம் கேட்க வேண்டும்?
நீங்கள் இல்லாமல்
நாங்கள் உறைந்து போய்விட்டோம்.

உங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்,
எங்கே தனியாக சென்றீர்கள்
நீங்கள் எல்லாத் தடைகளையும் கடந்து,
பல தியாகங்களைச் செய்தீர்கள்;
ஆனால், அதை முழுமையாக அனுபவிக்கவில்லை.

நாம் எத்தனை
கனவுகளைக் கொண்டிருந்தோம்;
அவை அனைத்தும் அழிந்துவிட்டன.
உங்கள் விருப்பங்கள்
அனைத்தும் மூழ்கிப்போயின.
 உங்கள் நம்பிக்கைகள்
அனைத்தும் மறைந்துவிட்டன.

உங்கள் பிரிவை எங்கள் இதயங்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை;
இனியும் ஏற்றுக்கொள்ளாது.
நாங்கள் எங்கள் அன்பை இழந்துவிட்டோம். 
தலை இல்லாத வாழ்க்கை
கதாபாத்திரம் இல்லாத புத்தகம் ஆக
எம் வாழ்க்கையை அமைதி இல்லாமல் வாழ்கின்றோம்.

ஆயிரக்கணக்கான உறவினர்கள் இங்கே இருக்கலாம்,
ஆனால் உன் போல் ஆகிடுமா
உங்களை மீண்டும் எப்போது சந்திப்போம்?

மீண்டும் சந்திக்கும் வரை
அன்புவை இழந்த குடும்பம்

தகவல்: குடும்பத்தினர்