யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்து சென்றாலும் எங்கள் கண்களும் மனமும் உங்களையே தேடுகின்றன..
நம் அன்பு ஒருபோதும் மங்காது. நீர் இவ்வுலகை விட்டு சென்றாலும் உமக்கினை யாரும் இவ்வுலகில் இல்லையென போற்றுகின்றோம்!
தினமும் உலகம் சுற்றுகிறது, மழை பொழிகிறது,
சூரியன் உதயமாகின்றது ஆனால் ஏன் உம்மை மட்டும் பார்க்க முடியவில்லை..?
தவிக்கின்றோம் துடிக்கின்றோம் உன் முகம் காணாமல்!!
இந்த வலியை நாம் எப்படி கடந்து செல்ல முடியும்? வா எங்கள் அன்பே எங்களுக்கு வழியைக் காட்டு.
அழுதாலும், சிரித்தாலும், விழுந்தாலும், நிமிர்ந்து நின்றாலும்
அங்கும் எங்கும் எம்முடன் நின்றீர்
கண்முன் நடப்பது போல்
நினைவுகள் வாட்டுகின்றன,,
யார் எம்மை பிரித்தது
நாங்கள் எங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இழந்துவிட்டோம்
கண்ணீரும் வற்றவில்லை, கவலைகளும் குறையவில்லை
கண் திறந்தாலும் மூடினாலும் உன் ஞாபகம்
எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கிவிட்டு
நீங்கள் எங்கு சென்றுவிட்டீர்கள்?
உங்கள் நினைவுகள் அனலாக எங்களை வாட்டுகின்றது.
உங்கள் பெயரிற்கேற்ப அன்பான புன்னகை, இனிமையான குரல்,
பாசமான அரவணைப்புடன் எங்களை வழிகாட்டிய உம்மை இழந்து நிலைகுலைந்து நிற்கின்றோம்..
எப்போது நாம் ஒன்று சேர்வோம் என ஏங்கி நிற்கின்றோம்.
உங்கள் குடும்பம்