Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUL 1970
இறப்பு 17 AUG 2017
அமரர் அன்பழகன் கனகலிங்கம் (அன்பு)
உரிமையாளர்- Betterway, Queensbury
வயது 47
அமரர் அன்பழகன் கனகலிங்கம் 1970 - 2017 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-09-2023

ஐயா ஆறு வருடங்கள் எங்கே ஓடியது
அன்பே! ஆறுதில்லை எம் மனமே!
எங்கும் நீ! எதுலும் நீயே!
மின்னலாய் ஓடி மறைந்தது தான் ஏனோ.

உன் குரல் கேளாமல் நாம் ஒரு நாள் கடந்தது இல்லை..
வலி தாங்க முடியாமல் நாங்கள் துடி துடித்து போகுரோம்.
இவ்வுலகில் உன்னுடன் சேர்ந்து நாமும் தொலைந்து போணோம் ஐயா..

பெற்றோருக்கு முத்தான மூத்த பிள்ளை இல்லை…
உடன் பிறந்தவர்களுக்கு தங்கள் தங்கமான அண்ணண் இல்லை…
கரம்பிடித்தவள் உயிர் அற்ற கொடியானாள்…
குழந்தைகள் தந்தையின் அன்பு களஞ்சியத்தை இழந்து தவிர்க்கின்றனர்...
இந்த உலகமே ஒரு பண்பான மனிதனை இழந்துவிட்டது…
 ஆறாது எம் துயரம்!

நாங்கள் நடுக்கடலில் வழி தெரியாமல் நிற்கிறோம் ஐயா.
மீண்டும் ஒரு முறை உம் முகம் காண துடிக்கின்றோம்.

உன்னுடன் பாசமாய் நடந்த பாதை எல்லாம் இப்பொழுது முள்ளாய் உள்ளது..

அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
 காட்டி விட்டு எங்கு சென்றாயோ..
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாய் போனதேன்……
 நீ இல்லாமல் இவ்வுலகம் எமக்கு வெற்றிடமே….
எமைக்காத்த இமை நீ ஐயா……:

இது இறைவனின் சதியா…
இல்லையேன் எம் விதியா இப்படி இவ்வுலகில் நாம் வாடுகிறோம்…….

உலகம் போற்ற பக்குவமாய் வாழ்ந்தாய்…
எல்லோருக்கும் ஒரு செல்ல பிள்ளையாய் இருந்தாய்…..
 எவ்வளவு கனவும் ஆசையுடன் வாழ்ந்த நம் வாழ்க்கை
 இப்போது தண்ணீரில் எழுதிய எழுத்தாய் போனது…..

யாரை நம்பி ஐயா எம்மை விட்டு சென்றாய்!
உன் திருமுகம் காணாமல் ஓயாது எம் உயிர்…

 மீண்டும் சந்திக்கும்வரை நீங்கள் உருவாக்கிய
உங்கள் குடும்பம்.

தகவல்: குடும்பத்தினர்