

-
24 JUL 1970 - 17 AUG 2017 (47 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Queensbury, United Kingdom
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே!!! எங்கே நாட்களும் ஆண்டுகளும் போனது....
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு!!
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்!!
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஏன் இந்த நிலைமை எமக்கு!!
எம்மை அரவணைத்து வழி காட்ட யாரும் இல்லாமல் தவிக்கின்றோம்!
எல்லாம் எமக்கு சொல்லித்தந்த நீ,,,,,
நீ இல்லாமல் வாழ்வதற்கு
சொல்லித் தரவில்லையே!!!!
வாழ்வு இந்த உலகத்தில் நிஜமில்லை
கடவுளும் உண்மையில்லை
என்று உணர்ந்தோம் உம் பிரிவால்!!!!
ஈன்றவர்கள் பரிதவிக்கின்றார்கள்..
கூட பிறந்தவர்கள் பாவியானார்கள்..
கரம் பிடித்தவள் தனி மரமானாள்...
உன் மூன்று முத்துக்கள் தவிக்கின்றார்கள்..
ஏன் இந்த கொடுமையும் பிரிவும் எமக்கு..
வலி தெரியாமல் எம்மை நீர் பாதுகாத்து வந்தீர் ஆனால்
இப்போது உம் பிரிவால் நாம் படும்
வலியும் வேதனையும் தாங்க முடிவில்லை......
நல்லா வலிக்கிறதே.
நாம் எல்லாம் புலம்புகின்றோம்.....
ஒரு முறை எம்மிடம் திரும்பி வா ஐயா
நீர் வாழ்ந்த இந்த உலகில் உமை விட்டு வாழ பிடிக்கவில்லை...
எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
எங்களைத் தவிக்க விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ!!!!
எந்த கொடியவன் இந்த பிரிவை எமக்கு தந்தவன்!!!!
விடா முயற்ச்சியாக உம் திருமுகம் தேடும் உன் குடும்பம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Queensbury, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
