

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே!!
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் உன் பிரிவால்
கண்ணீரோடு காலங்கள்
கடந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன
உன்னை காணாத எம் கண்கள்
நித்திரையை தொலைத்துவிட்டு
கண்ணீரை வடிக்குதையா
ஊர் போற்றும் நல்லவனாக வாழ்ந்து
எங்களையும் வாழவைத்தாய்
அன்பை விதைத்து,
பண்பையும் பாசத்தையும் பகிர்ந்துவிட்டு
ஏன் பிரிந்தாய்
எப்போதும் எங்களை நிழலாகத் தொடர்ந்து வரும் அன்பே
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
இனி காண்பது எப்போது
நீ எங்களுடன் வாழும் வரை
கண்கலங்க வைத்ததில்லை
ஆனால் இப்போது நித்தம்
கண் கலங்கி, கதிகலங்கி, கனமான இதயத்துடன் வாழ்கிறோம்
மொத்தமாக உன்னை
பாதி வயதில் பரிகொடுக்கும்
துயர் எம்மை வந்து சேர்ந்ததேனோ?
வார்த்தைகள் இல்லை எங்கள் வலி கூற!
நீண்ட வலிகளுடன் கலங்கி
நிற்கிறோம் உமை சுமந்து
உம்மை நினைக்கும் போதெல்லாம்
இதயத்தில் வலிகள்
கண்ணீரில் கண்கள்
மௌனத்தில்
மொழிகள்
முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் கொதிக்குதையா
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
எப்போதும் அந்த அன்பு முகத்தைத்
தேடும்
உன் குடும்பம்