Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUL 1970
இறப்பு 17 AUG 2017
அமரர் அன்பழகன் கனகலிங்கம் (அன்பு)
உரிமையாளர்- Betterway, Queensbury
வயது 47
அமரர் அன்பழகன் கனகலிங்கம் 1970 - 2017 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 28-08-2024

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஏழானாலும்
அழியாது எங்கள் அன்பின் முகம்!!

நெஞ்சம் நெகிழ வைக்கும் அன்பு!
உயிரை உலுக்கி நடுங்க வைத்த பிரிவு!
 நாம் வாழ ஒரு சொந்தம் இல்லை இந்த உலகில்.

வருடங்கள் பல சென்றாலும்,,
வலிகள் குறைவதில்லை.
இமை மூடி தூங்கினாலும்,,
விடை தேடி அழுகின்றது எம் இதயம்.

நாங்கள் எங்கள் முகவரியை இழந்து நிற்கிறோம்!!!
அன்பெனும் ஆணிவேர் அறுந்து போனதே!
நாம் அறியவில்லை இப்படியும் நடக்குமென்று!!

ஆயிரம் உறவு இருந்தாலும்
ஓர் உறவில் ஆயிரம் உறவின் நிகர் நீ ஐயா.
குருதி சொந்தம் ஒன்று இல்லையென்று
நம்ப மறுக்கிறது நெஞ்சம்.

விடிகின்ற பொழுதுகளில் நீங்கள்!
வருகின்ற கனவெல்லாம் நீங்கள்!
 எப்படி சொல்வது நீங்கள் இல்லையென்று
நம்ப மறுக்கின்றது எங்கள் நெஞ்சம்.

எங்கள் சொந்தமே உன் பிரிவை சொல்ல
 எந்த மொழியிலும் வார்த்தை இல்லை.

பாவியான எங்கள் வாழ்க்கையை
 தூக்கி நிறுத்த வேண்டும் ஆயின்
நீங்கள் மீண்டும் வர வேண்டும்.

நினைவில், நித்திரையில்,
எங்கள் உணர்வில், உள்ளத்தில்
எப்போதும் - நீதான்…
கனவில், கற்பனையில்
 எங்கள் கண் பார்க்கும் இடமெல்லாம்- நீதான்…

காற்றினிலே உம் குரல் வந்து
கணப் பொழுதில் செல்கிறதே!
 கண் பார்க்கும் இடமெல்லாம்
காண ஏங்கும் கண்கள் இங்கு
கண்ணீரில் தினமும் பூக்கிறதே!

அன்பே! எங்கள் உயிரின் ஓவியமே
நீ தான் எங்கள் சன்னதி
 நீ இன்றி எமக்கேது நிம்மதி!

நம் கண் மூடியிருந்தாலும் மனம் விழித்திருக்கிறது.
உலகம் உயிருடன் இருக்கிறது
ஆனால் நாம் இறந்துவிட்டோம்.
கனவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன
வாழ்க்கை நம்மை உயிருடன் கொன்றது.

பல ஏக்கங்களுடன் தொடர்கிறது
எம் கண்ணீர் பயணம்
 உம்மை வந்து சேரும் வரை உங்கள் குடும்பம்

தகவல்: குடும்பத்தினர்