

-
21 SEP 1960 - 08 AUG 2020 (59 வயது)
-
பிறந்த இடம் : Aberystwyth, United Kingdom
-
வாழ்ந்த இடங்கள் : இலங்கை, Sri Lanka நியூஸ்லாந்து, New Zealand New Jersey, United States
கண்ணீர் அஞ்சலி
திருமதி அபிராமி நர்த்தனா அவர்களிற்கு நியூ ஜெர்சி தமிழ் கலை கலாச்சார மன்றம் (New Jersey Tamil Arts & Cultural Society) தனது கண்ணீர் காணிக்கையை செலுத்துகின்றது. திருமதி அபிராமி நர்த்தனா அவர்கள் நியூ ஜெர்சி தமிழ் கலை கலாச்சார மன்றத்தின் ஓர் வாழ்நாள் உறுப்பினர் மட்டுமல்லாது அவர் எமது மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற தமிழ் பாடசாலையின் ஆரம்பகால ஆசிரியருமாவார். இறைவன் அவருக்கு கொடையாக அளித்த சங்கீத ஆற்றலாலும் தனது வசீகர குரலினாலும் எமது தமிழ்க் குழந்தைகளிற்கு சங்கீத கல்வியை மிகவும் நன்றாக கற்பித்திருந்தார். சங்கீதம் கற்பித்தலோடு தனது சேவையை நிறுத்திக்கொள்ளாது எமது தமிழ்ப் பாடசாலை பிள்ளைகளின் ஆற்றல்களையும் திறமைகளையும் இனம்கண்டு பல்வேறுபட்ட மேடை நிகழ்வுகளினூடாக அவற்றை வெளிப்படுத்துவதில் திருமதி அபிராமி நர்த்தனா அவர்களிக்கு நிகர் வேறு யாருமில்லை. திருமதி அபிராமி நர்த்தனா அவர்களிடம் சங்கீதம் பயின்ற மாணவர்களே அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள் என்பதில் மிகையேதுமில்லை. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிற்கும் எமது மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் அனைவரது துயரிலும் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். திருமதி அபிராமி நர்த்தனா அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Summary
-
Aberystwyth, United Kingdom பிறந்த இடம்
-
Hindu Religion
Shocking and heartbreaking. Please accept our sincere condolences. From: Thiru, Kamala, Srikanth and Theesi from NJ