

-
21 SEP 1960 - 08 AUG 2020 (59 வயது)
-
பிறந்த இடம் : Aberystwyth, United Kingdom
-
வாழ்ந்த இடங்கள் : இலங்கை, Sri Lanka நியூஸ்லாந்து, New Zealand New Jersey, United States
பிரித்தானியா Wales, Aberystwyth ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிராமி ஈஸ்வர நர்த்தனா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இனிய உள்ளங்களைத் தேடும் ஆத்மாவின் குரல் ......
யாருக்குத் தான் புரியும் அபியை பாரினில் இருந்து பிரித்ததனால் என்ன பயன்!
குரல் வளமும் இன்னிசை அறிவும் நல்கி இறைபுகழ் பாடியே வாழ்ந்த இவ்வேளையில்....
அழகின் சிகரமுமாய், அமைதியின் உருவமுமாய்
இனிய புன்முறுவலுடன் எம்மை எல்லாம் மகிழ்வித்தாய்
இவை எல்லாம் கண்டுகொள்ள உனக்கேன் பொறுக்கவில்லையோ
அதனால் தானோ அவசரமாய் அவளை நீ அழைத்தாயோ!
வண்ணை நகர் விசுவேச விநாயகரின் துணையுடன்
உண்மை உடல்நிலை என்றும் எவரும் அறியமுடியாத நிலையில்
தன்னிலை மறந்து எல்லோருடனும் பேசிய கண்கள்..... கூறிய வார்த்தைகள்.....
பக்குவம் பெற்ற ஞானிபோல் விடைபெற்றுச் செல்கையில்
உதிர்ந்த கண்ணீர்த் துளிகள் பெருமைக்குரியனவாம் - ஏனெனில்
இறைவனின் வரமாய் இன்பமாக வாழ்ந்த இல்வாழ்க்கை - என்றும்
எம் மனதில் உயர்ந்த இடத்தில் உறை கொண்டுள்ளீர்கள்.
வளமான வாழ்க்கையில் வசந்தத்துடன் கொஞ்சும் குழந்தைகள் - என்றும்
வாழ்க்கைத் துணைவரின் வற்றாத அன்பின் மத்தியில் சிறப்பாக வாழ
வாழ்வின் அத்திவாரத்தின் வாசல் தாண்டி உம்பணியை
சீராட்டும் தாயாக சிறப்பாக ஈடேற்றி இன்பம் கண்டீர்கள் - நிறைவாக
நாம் வாழ்ந்தென்றும் நிலைக்கின்றோம் உங்களைப்போல் வாழும் தெய்வங்களால்......
எங்கிருந்து வந்தோம்... எதைக் கொண்டு வந்தோம்....
எங்கு நாம் செல்வோம்... எதைக் கொண்டு செல்வோம் என்று
விடை தெரியாத வாழக்கைச்சுழல் சக்கரத்தில் - என்றும்
இனிய பெற்றோர் துணையுடன் வாழ்ந்த இடங்கள் எங்கும்
உற்றார் உறவினர் பலரின் அன்புக்கரங்கள்.....
சகோதரச் செல்வங்களுடன் துள்ளித் திரியும் பள்ளிப்பருவத்தில்
பழகித் திரிந்த நண்பர்கள் கூட்டம் பல.....
அமெரிக்காவில் ஆசானாய், அறிவூட்டும் அன்னையாக அறிவொளி புகட்டி
வாழ்ந்த வாழ்க்கையில், அன்பாய் வாழும் பல மனிதர்களுள் மாணிக்கமாய் - சிலர்
அன்பிற்காய் வாழும் கலைப்பூக்கள்......
புஷ்பங்கள் தினம் பூப்பினும் புனிதப்படுபவை வெகுசில
ஒவ்வொரு ஆண்டும் ஒளிர்விடும் போதும்
எங்கள் இதயத்தைத் தொட்ட உங்கள் அன்பிற்காய்
கண்ணீர்த் துளிகளை இமைகளில் கோர்த்து மாலை சூட்டுகின்றோம்
பன்னிரு கரத்தான் நல்லூர் முருகனை நினைத்து
பதினைந்தாம்நாள் திருவிழா நாளில் அவன் திருவடி சேர்ந்த
நின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம் - என்றும்
அழியா நினைவலைகளுடன் நம் வாழ்வினில்....
ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Aberystwyth, United Kingdom பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Shocking and heartbreaking. Please accept our sincere condolences. From: Thiru, Kamala, Srikanth and Theesi from NJ