

பிரித்தானியா Wales, Aberystwyth ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிராமி ஈஸ்வர நர்த்தனா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் பிறவி எடுத்தாலும்
உன் துயர் மனதை விட்டு நீங்காது
ஈருயிர் ஓருயிராக
இணைந்து வாழ்ந்தோம்
தனியனாய் தவித்தின்று எப்பிறவியில்
உனை நான் இனி காண்பேன்
என எண்ணி ஏங்குகின்றேன்
அன்பு பண்பு பாசத்தோடு
நல்ல மனைவியாய் வாழ்ந்த வாழ்கையை
எண்ணி மனம் மாய்ந்து துன்பத்தில்
துவண்டு துவள்கிறேன்
அம்மா உன் பிள்ளைகளாக பிறந்தநாள்
முதலாக உன் பாசமுகம் பார்த்திருந்தோம்
எம் ஆசை அம்மாவே உன்னோடு எம்
வாழ்நாள் முழவதும் இணைந்து
வாழ்வோமென மகிழ்ந்திருந்தோம்
பாவி எங்கள் பாசவலையறுத்து
பாதியிலே பிரிந்து விட்டாயென
உருகி உள்ளம் வெதும்பியே
கதறுகின்றோம் தாயே..
வையத்தில் நீ வாழ்ந்தபோது
வாழ்வெமக்கு வசந்தமாய் ஆனது
வானுறையும் தெய்வத்துள் கலந்தபோது
வாழ்வே எமக்கு கசந்து விட்டது
தரணியில் உனக்கு இணையாருமில்லை
தவிக்கின்றோம் உன் பாசம் பரிவு ஏதுமின்றி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
Shocking and heartbreaking. Please accept our sincere condolences. From: Thiru, Kamala, Srikanth and Theesi from NJ