Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 SEP 1960
இறப்பு 08 AUG 2020
அமரர் அபிராமி ஈஸ்வர நர்த்தனா 1960 - 2020 Aberystwyth, United Kingdom United Kingdom
Tribute 54 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

பிரித்தானியா Wales, Aberystwyth ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிராமி ஈஸ்வர நர்த்தனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. ராஜேந்திரம் சிவகாமி ஜெரிமையா(யாழ்ப்பாணம், ஐயனார் கோவிலடி) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா பராசக்தி செல்வரெட்ணம்(யாழ்ப்பாணம், ஐயனார் கோவிலடி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

Dr. ஜெரிமையா ரட்ணதேவி சிதம்பரநாதன்(Auckland, நியூசிலாந்து) தம்பதிகளின் இனிய மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் குகனேஸ்வரி சுப்பிரமணியம்(வழக்கறிஞர், உரும்பிராய்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுப்பிரமணியம் ஈஸ்வர நர்த்தனா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுபன், அமுதன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

Dr. கல்யாணி முருகானந்தம்(Melbourne, அவுஸ்திரேலியா), ரஞ்சினி நாகேந்திரா(Darwin, அவுஸ்திரேலியா), சிதம்பரநாதன் குமரன்(Auckland, நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

எங்கள் இதயங்களில்
நிரந்தரமாய் நிறைந்திருக்கும் எம் குலவிளக்கே!
அன்னையே, துணைவியே, அன்புக்குழந்தையே,
அருமை சகோதரியே! அழகிய நண்பியே!

உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த தெய்வமே!
ஈன்றெடுத்த செல்வங்களை என்றென்றும்
அன்புமழையால் அரவணைத்தவளே!
நல்லறிவும் உயர்பண்பும் தந்து வளர்த்தவளே!

பெற்றோரை என்றும் பண்போடும் பாசத்தோடும்
நேசித்து அனுசரித்த செல்வமகளே!
உடன் பிறந்த உறவுகளை உயிர்போல
உறவாடி உபசரித்து வாழ்ந்தவளே!

சுந்தரக் குரலில் இசைபாடி சுற்றியிருந்த
நண்பர்களை மகிழ்வில் ஆழ்த்திய இசைமகளே!
சாயிநிலையக் கூடத்தில் சங்கீதம் பாடி
சேவை புரிந்த தெய்வீகக் கலைமகளே!

தமிழ்ப் பாடசாலையில் கற்போருக்குப் பண்ணிசை தந்தவளே!
நித்தம் இறைவன் புகழ் பாடித் தொழுதவளே!
ஸ்ரீ விசுவேஷ விநாயகரையும் நல்லூர் கந்தனையும்
என்நாளும் கண்டு களிப்புற்றவளே!

மென்மையே தன்மையான,
திடமான மனம் கொண்ட, கண்ணியம் தவறாமல்
பண்புடன் வாழ்ந்த புதுமைப்பூமகளே!
புறம் பேசும் பழக்கமற்ற, இனவாதத்தை
எதிர்த்து நின்ற குறுநகைச் செல்வியே!

இளவயதில் இறையடி சேர்ந்து
பன்னிரண்டு திங்களாயினும்,
எங்கள் இதயங்களில் பசுமையான
உங்கள் நினைவுகள் என்றென்றும்
அன்றுபோல் நிலைத்திருக்கின்றதே!

அன்னையே! அன்பின் அபிராமியே!
உங்கள் ஆத்மா சிவனடியில் சாந்தி பெற
தினம்தோறும் தவிப்போடு யாசிக்கினர்
பிள்ளைகள், பெற்றோர், கணவர்,
சகோதர சகோதரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்


தகவல்: குடும்பத்தினர்