Clicky

மலர்வு 29 JUN 1979
உதிர்வு 03 MAY 2022
அமரர் விக்னேஸ்வரன் முகுந்தன்
வயது 42
அமரர் விக்னேஸ்வரன் முகுந்தன் 1979 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
முகுந்தீபம் கண்ணன் பெயர் தாங்கி நற்குணங்கள் அனைத்தும் உள்வாங்கி அழகாய் சிரிக்கும் எம் உடன் பிறவா உறவாகிய முகுந்தன்/முகுந்தன் அண்ணா எம் குழுவின் பேரழகி சிறு தங்கை நிஷானியின் காதல் கணவனாய் எங்கள் அறிமுகம் தொடங்கி இத்துடன் நாலிரண்டு ஆண்டுகள் வள்ளுவனும் வாசுகியுமாய் பேரழகுப் பெட்டகமாய் முத்தான மூன்று குழந்தைகளுடன் ஊர் போற்ற நாம் அகமகிழ வாழ்ந்தீரே கடமையே கண்ணியமாய் அமைதியின் திருவுருவாய் அம்மை அப்பன் பெருமை கொள்ள உடன் பிறப்புகள் வாழ்வை வெளிச்சமிட்டு பெறாமக்கள் மருமக்கள் மனமறிந்து சிறந்து வாழ்ந்தீரே மனையாளை மூத்த மகளாக நேசித்து மக்களிற்கு நல்லன எல்லாம் தேடி அவர் தம் வாழ்விற்காய் நட்சத்திரப் பந்தலிட்டு தந்தைக்கு உதாரணமாய் திகழ்ந்தீரே மனைவியின் சொந்தங்களை உம் சொந்த உறவாய் எண்ணி மச்சான் திருமணத்தில் நிறைந்து சிறந்தீரே உறவுகள் போற்றும் உன்னத மனிதனாய் நண்பர்களின் பிரிய தோழனாய் எங்களுக்கெல்லாம் ஒரு சகோதரனாய் எம் குழந்தைகளின் முகுந்தன் மாமாவாய் அவர்களின் முன்னேற்றங்களில் முதல் நின்று பாராட்டினீரே கற்பனைகள் பல கண்டோம் வேதனையை வடிக்க தமிழில் வார்த்தைகள் இல்லை ஐயா இறுதியில் கூட எமை அழைத்து அமைதியாய் புன்னகைத்தீரே உமது அதியுச்ச நல்ல குணங்களால் கடவுள் உமை தன்பால் ஈர்த்துக் கொண்டான் ஐயா சிறுதங்கை அருகிருந்து தோளோடு நாமிருப்போம் உம் இலட்சியமாம் உம் பிள்ளைகள் பட்டம் பல பெற்று நானிலத்தில் புகழோச்சி தலைநிமிர நாம் அவர்களுடன் துணையிருப்போம் வழியனுப்ப மனமின்றி அனுப்பி வைக்கின்றோம் நிம்மதியாய் சொர்கத்தில் இருந்து ஆசிர்வாதங்களை அனுப்பி விடும் என்றும் அன்புடன் ஷெரின் வசந்தராஜ்,மஹேஸ்வரி ராமன்,வாணி கலாபன்,றொசா ஜெசி,சிந்து பரணிதரன்
Write Tribute

Tributes