Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 29 JUN 1979
உதிர்வு 03 MAY 2022
அமரர் விக்னேஸ்வரன் முகுந்தன்
வயது 42
அமரர் விக்னேஸ்வரன் முகுந்தன் 1979 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி - அக்ஷய திருதியை(22-04-2023)
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஸ்வரன் முகுந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்களை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே
பிரிவின் தூரம் அறிந்தும்
உங்களை மனம் துரத்தித் தேடுதே!...
பொல்லாத நோயொன்று சொல்லாமல்
வந்ததினால் பாதிவழி வாழ்விலே
எங்களை விட்டு சென்றீர்கள்!!
பக்கத்தில் நீங்கள் இருப்பது
போன்ற நினைப்புடனே
பகல் இரவை கடக்கின்றோம்
நேற்று வரை நீங்கள் எம்முடன்
வாழ்ந்து நிறைவு கண்டதெல்லாம்
நேற்றோடு போயிற்று
உங்கள் நினைவொன்றே
எப்போதும் எம் வாழ்வாக…
நினைவில், நித்திரையில்,
எங்கள் உணர்வில், உள்ளத்தில்,
கனவில், கற்பனையில்
கண்பார்க்கும் இடமெல்லாம்
நிறைந்திருக்கிறீர்கள்

நீங்கள் இல்லாத நாட்கள்
உயிரில்லாத நொடிகளாகிறது
நீங்கள் வாழ்ந்த வீடு,
நீங்கள் கடந்த இடம் என்று
உங்களை நாங்கள் நினைத்திருக்க
நீங்கள் மட்டும் எங்கு போனீர்கள்?
எமக்கு உயிர் தந்த அப்பாவே,
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆசை அப்பாவே உங்கள் நினைவுகள்
எப்பொழுதும் எம்மோடு நிறைந்திருக்கும்
நித்தமும் பாசமாய் எம்
இதயத்தில் வாசமாய்
ஆனவரே அப்பாவே!
இன்று வரை கணங்கள் தோறும்
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபங்கள் கண்ணீரையும்
தந்து கொண்டேயிருக்கின்றன
அன்புத் தெய்வமே எங்கள் அப்பா!
எங்கள் ஆரூயிரே எங்கள் அப்பா!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Premananth Family from Canada

RIPBOOK Florist
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Arutchelvam Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos