திதி : 10-05-2024
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஸ்வரன் முகுந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்னழகு பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்
ஓடியோடி வந்து உதவிடும் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
எம்மை தனியே தவிக்க விட்டு
நீங்கள் சென்றதேனோ?
உங்கள் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் இன்னும் மறையவில்லை
பாச பறவைகள் எங்களோடு
இருந்த கூட்டை விட்டு
எங்கு தனியாக சென்றீர்களோ?
ஆா்ப்பரித்து எழுந்த அலையே
அமைதி கொண்டது ஏனோ?
நிழலாய் நீங்கள் இருப்பீர்கள்
என்றிருந்தோம்
மரமே சரிந்ததுவே எம் வாழ்வில்
எம் பலமே நீங்கள் என்றிருக்க
சிலையாய் எமையாக்கி
சென்றதேனோ?
எம் இனிய அப்பாவே,
நீங்கள் சென்ற இடம் அறியாமல்
உங்கள் நினைவால் வாடுகின்றோம்.
என்றும் எங்கள்
இதயத்தி்ல் நீங்கள் இருப்பீர்கள்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Premananth Family from Canada
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Arutchelvam Family From Canada.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எமது சகோதரர் முகுந்தன் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து நேராகவும் தொலை பேசி ஊடாகவும் மற்றும் முகநுல் வலைதளம் என அனைத்து வளிகளிலும் எமக்கு...