

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு மாணிப்பாய், சுவிஸ் Bern ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நீங்கள் இல்லையெனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா கண்களில்
திரண்டிடும் நீர் கரைத்திடுமோ காயத்தை
நீங்காத உங்கள் நினைவுகள் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உங்கள் தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே இன்முகம் காட்டி
எம் இல்லம் சுற்றிய நாட்களை
எப்படி மறப்போம்..!
அருகினிலே இனிமையாய் நிஜமாய்
கண் உங்கள் உருவத்தை
நிழற்படமாய் பார்க்கும்போது நெஞ்சம்
விம்மி அழுகின்றதே
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
பலநூறு உறவுகள் இருந்தென்ன பயன்
எம் இனிய அன்பான அப்பாவிற்கு...
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!