யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமாவதி முருகேசு அவர்களின் நன்றி நவிலலும்.
இந்த உலகில் உண்மையான
பாசத்திற்கு கிடைக்கும் பரிசு
கண்ணீர்த் துளிகள் மட்டுமே!!!
உன்னையே தேடும் என் கண்கள்
அம்மாவென அழைத்திட ஆசைபெருகிடுமே
அம்மா இன்று இல்லையென
கண்கள் நிறைகிறதே
உயிர் தந்து உருவம் தந்து வளமான வாழ்வுக்கு ஒளிதந்து
கல்வியுடன் நற்பண்புகளை ஊட்டி வளர்த்த அன்னையே
கொடிமரம் சாய்ந்தது போல் எம்மை விட்டு மறைந்தீரோ
மாதம் ஒன்று ஓடி மறைந்திட்டாலும்
மறப்போமா எங்கள் அன்னையை..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.