
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த உமாவதி முருகேசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-10-2025
அம்மா எம் கோவில்
அம்மா நீ எம்மை விட்டு
பிரிந்து சென்று ஆண்டுகளும் இரண்டாச்சு!
ஆனாலும் எம் மனது ஆறவில்லை இன்று வரை!
ஏனோதான் எம்மை விட்டு நீ பிரிந்து சென்றாயோ!
விடையின்றி தவிக்கின்றோம்
வேதனையில் துடிக்கின்றோம்!
அம்மா எமக்காக நீ செய்த
தியாகங்கள் எத்தனையோ!
அத்தனையும் நாம் மறவோம்
எம் மூச்சு நிற்கும் வரை!
பிள்ளைகளே உலகம் என்று
நீ வாழ்ந்தாய் எமக்காக!
பெருமையாக இருக்குதம்மா
உனை நினைக்கும் போதெல்லாம்!
தாய் என்ற சொல்லுக்கு
இலக்கணமாய் நீ வாழ்ந்தாய்
தவிக்கின்றோம் உமை பிரிந்து
மிதக்கின்றோம் நாம் கண்ணீரில்!
மீண்டும் ஒரு முறை உன் மடிதேடி நிற்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...