யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த உமாவதி முருகேசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-10-2024
பாசத்திற்கும் பண்பிற்கும்
அரவணைப்பிற்கும் பாரில்
இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே!
உங்கள் முகம் கண்டு
ஆண்டு ஒன்று ஆனதோ அம்மா...!
புன்னகை புரியும்
உங்கள் பூமுகத்தை
நாம் தேடுகின்றோம் இப்புவியிலே...
ஏன் அம்மா எம்மைவிட்டு
வெகுதூரம் சென்றீர்கள்?
எங்களை பெற்றெடுத்து
பாசத்துடன் வளர்த்து ஆளாக்க
தாயாக நீங்கள் செய்த
தியாகத்தை இறுதிவரை
நாம் மறவோம்...
மரணம் உங்களை எங்களிடம்
இருந்து பிரித்தாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை
பறித்திடவே முடியாதே!
ஏழேழு ஜென்மங்கள் நாங்கள் எடுத்தாலும்
எமக்கு நீங்கள் அன்னையாய்
மீண்டும் வந்திடவே
வேண்டுகின்றோம் இறைவனிடம்!
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின்
ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!