10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் துரைஐயா மகேந்திரன்
(இந்திரன்)
வயது 45
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைஐயா மகேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையின் நினைவுகள் பறந்தோடிப்
பத்தாண்டு கழிந்த போதும்
பாசத்தின் அதிர்வலைகள் மனதில்
பதிந்ததினால் அழிந்திட மறுக்கிறதே!
எழுதி வைத்த பந்தம் ஏழேழு சென்மமதை
விழுகின்ற கண்ணீர்த் துளிகள் சொல்லும்- எம்மனம்
அழுது அழுது ஓயவில்லை அரவணைத்த வாழ்வை
ஆரெம்மை ஆற்றிடினும் ஆறவில்லை வலிகள்!
நித்தமுனைத் தேடும் பிள்ளைகளின் தாகம்
சத்தமின்றி இருக்கும் சத்திரத்தின் வாடல்
தத்தம் கவலைகளில் காலமது கடக்க
பெத்தமனம் வாடுதய்யா சித்தமது கலங்கி!
உன் ஆத்மா நிழல் தேடி நிற்கும்
அன்பு மனையாள் பிள்ளைகள் உறவினர்கள்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். kuru .zurich