திதி: 26-12-2021
யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைஐயா மகேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆனந்தம் கலைந்து ஆண்டெட்டு ஆனதுவே
அகமென்றும் உன்னினைவில்
ஆர்ப்பரித்து எழுகிறதே
வாழ்வொன்று தந்து
வழிகாட்டி மறைந்ததினால்
வளர்கின்றன பிள்ளைகளின்
வாட்டமின்னும் கலையாமல்
சிந்தனையும் செயலும் உந்தன்
சிரித்த முகம் தேடுதய்யா
சொந்தமான நீயிருந்தால்
சொர்க்கமே வந்திடுமே
சோகமும் வந்துவிட்டால்
உன்னினைப்பே வாட்டுதய்யா
என்னவே உன்நினைவு
எங்கள் மூச்சுள்ளவரை
எள்ளளவும் வற்றாமல்
ஏங்கிய துடிக்கிறது
இல்லத்தின் இடர்தீர்ப்பான்
இல்லாத வாழ்வுகண்டு
பிள்ளைகளும் தவிக்கின்றனர்
பிதாமுகம் காணாமல்
உள்ளம் உருகுவது
உடனறிந்து வேதனையில்
வெள்ளத்தில் மூழ்கிவிட்ட
நகரம் போல் நாதியற்று
வெளிச்சமின்றித்
தேடுகின்றேன்
வேதனையைத் தீர்த்திடுவாய்
உன் ஆத்மா சாந்தி பெற
உன் நாமம் இறைக்களித்து
நல் ஆத்மா சாந்தி அடைய
நாம் வணங்கித் துதிக்கின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
இங்ஙனம்
மனைவி பிள்ளைகள்
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். kuru .zurich