யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைஐயா மகேந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
துயில்கொள் காலம் விழிநீரின் சோகம்
வழிநிறைய பூக்கள் வாடாத உன்னுருவம்
விழிநிறைய கண்ணீர் துளியழவும் குறையா
பழியில்லா வாழ்வில் பாய்ந்த காலனாமோ
குழிவிழுந்த இல்லத்தில் குறையொன்றுவுண்டு
குடும்ப விளக்கின் குணநாயகன் இல்லாவாழ்வில்
குன்றும் குழியுமாக செல்லும் எம்
வாழ்க்கையை சொல்லியழும் எம்மை
தேள்வகற்ற யாருண்டு அன்று
உனை நினைத்த மனம் என்றும் எமைவிட்டழியாது
அஃதே நீதந்த மூவுயிரும் உனை நினைத்தே வாடுதே
தினம் தினம் உனை நினைத்தாலும்
திதி நாளில் உனை நினைக்க
மனம் மறுக்காது
காலம் ஏழாயினும் கலங்குவதால்
பதிவை நான் மதிக்கின்றேன்
பாசத்து துணையே பாருலகை விட்டு
நீ வேறு உலகு சென்றாலும்
ஊரு உலகிற்காய் வாழவில்லை
உனக்காகவே வாழுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்களின் பிரிவால் துயருறும்
ஆருயிர் மனைவி, ஆருயிர் பிள்ளைகள்,
உறவினர்கள்.
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். kuru .zurich