Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 13 APR 1968
இறைவன் அடியில் 24 DEC 2013
அமரர் துரைஐயா மகேந்திரன் (இந்திரன்)
வயது 45
அமரர் துரைஐயா மகேந்திரன் 1968 - 2013 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைஐயா மகேந்திரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.  

காலங்கள் ஓடினும் கவலைகள் மாறுமோ...???
கண்ணீரின் வலிகளைக் கடக்கத்தான் முடியுமோ...??
பாலகர்கள் வளர்ந்து வாழ்தலும் அறிவீரோ
பாசங்கள் மறையாமல் தேடுதல் அறியயோ
மறைந்ததோ உன்னுடல் மனங்களோ உன்னுடன் 

தினங்களும் தேடும் அன்பியல் தந்தை நின் நிசம்
உருவம் மறைந்து ஆண்டு ஒன்பது
உன்னிதயம் இணைந்து ஆண்டுகள் இருபத்தைந்து
இன்னும் பல வருடம் இல்லை மறுபிறப்பும்
என்வை வந்தடைய உன்னை விட யாருளரோ
முன்னையோர் தவம் செய்தோம் நற்தந்தையாக்
கணவனாய் நல் உடன்பிறப்பாய் மைத்துனனாய்
மகனாய் மருமகனாய் இப்பூமியில் எம் குடும்பத்தில்
வந்த வரம் பெற்றோமே வருவாய் மீன் பிறப்பாய்
வந்தெம் குடிபுகுவாய் அன்பனே வரும் வாசல்
காத்திருப்போம் அன்பு மனையாள் பிள்ளைகள்

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி, உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள். 

தகவல்: குடும்பத்தினர்