யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைஐயா மகேந்திரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலமும் ஆறாகிக் கண்ணீரும் ஆறாகி
ஓடம்போல் எம் வாழ்வை
விட்டிங்கு ஓடிய இடமேது இந்திரனே!!!
எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எமைவிட்டு நீங்காது நின் நினைவுகள்
பற்றுதலும் துடிப்பும் பாசமுமாய்
பாரனிலே எம் வாழ்வைக் கண்ட பலர்
காதினிலே பேசியது குருட்டுக் காலனவன்
காதினிலும் வீழ்ந்ததுவோ அக்கூற்றனவன்
குறுக்கிட்டுக் குடும்ப வாழ்வைச் சிதைத்தனனோ
எம் குடும்பத்தில் நீயின்றிப் பரிதவிக்கச் செய்தனனோ
பாசத்து நாயகனே இந்திரா
உன் பாதத்தைத் தேடுகிறோம் வந்திடாய்
நேசமிகு பிள்ளைகள் நெடுவழி பார்த்து
ஓவென்றழும் மௌனக் கோலமதை நாளும்
நான் பார்த்து நடைபிணமாயாகின்றேன்
நலம் சொல்லி எமையாற்ற வானவனைக் கேட்கின்றேன்
ஆறாண்டு கண்ணீரும் ஆறாகிப் போகுதய்யா
ஆற்றிடத்தான் நீயின்றி யாராலாகுமய்யா
தேற்றிடச் சுற்றங்கள் பல விருந்தும் தேறாமல்
மன முன்னைத் தேடியே நிற்குதய்யா
நின் நிழலிற்குப் பூச்சொரிந்து தவிக்கும்
மனைவி பிள்ளைகள் உறவினர்கள்
உங்கள்ஆத்மா சாந்திக்காய்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். kuru .zurich